search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலீபான் தளபதி"

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய வான் தாக்குதலில் தலீபான் தளபதி உள்ளிட்ட 6 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. #Afghanistan #Taliban #AirStrike
    கஜினி:

    ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் காராபாக் மாவட்டத்தின் ஜமால் கில் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசவேலை நடத்த சதி செய்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பு படைகள் அதிரடியாக வான்தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் தளபதி ரபியுல்லாவும் ஒருவர் என தகவல்கள் கூறுகின்றன. தலீபான்கள் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப் படுகிறது.

    இந்த தாக்குதல் பற்றி மாகாண அரசு செய்தி தொடர்பாளர் ஆரிப் நூரி கூறும்போது, “வான்தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி ரபியுல்லா மிகவும் கொடூரமானவர். அவர் கொல்லப்பட்டு விட்டதால், அந்தப் பகுதியில் இனி பாதுகாப்பு நிலை மேம்படும்” என குறிப்பிட்டார்.

    இந்த தாக்குதல் பற்றி தலீபான்கள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.  #Afghanistan #Taliban #AirStrike 
    பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தலீபான் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Pakistan #Taliban
    பெஷாவர்:

    பாகிஸ்தானில் காஜி பம்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

    அவர்களைக் கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் முடிவில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தின் ஜூமா பஜார் பகுதியில் ஷியா பிரிவினரின் வழிபாட்டுத்தலத்தில் கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 சீக்கியர்கள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியான இஸ்லாம் உள்ளிட்ட 4 பேர்தான் காஜி பம்ப் பகுதியில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச்சண்டையில் பலியாகி உள்ளனர் என தெரியவந்துள்ளது. பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய மொகிபுல்லா என்பவரும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார்.

    துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  #Pakistan #Taliban
    ×